மேற்குக்கரையில் உள்ள யூத குடியிருப்பு ஒன்றில் நூற்றுக்கும் அதிகமான புதிய வீடுகளை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பைடன் அவர்கள் இஸ்ரேலை சென்றடைவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இஸ்ரேலுக்கு விஜயம் செய்கின்ற துணை அதிபரான ஜோ பைடன்தான், அதிபர் ஒபாமா பதவியேற்ற பின்னர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்கின்ற மிகவும் உயர் அதிகாரியாவார்.
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்கள் இடையே சமரச பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சியாக ஜோ பைடன் இஸ்ரேல் செல்கிறார்.
அமெரிக்க முயற்சிகளை இந்த புதிய நிர்மாணம் குறித்த அறிவிப்பு குறைத்து மதிப்பிடுவதற்கான அச்சுறுத்தலாக இருப்பதாக ஒரு மூத்த பாலத்தீன அதிகாரியான, சாயிப் எரகத் கூறியுள்ளார்.
ஆனால், புதிய நிர்மாணம் ஏற்கனவே உள்ள கட்டிடங்களில் உள்ள ஆபத்தான இடைவெளியை நிவர்த்தி செய்யவே மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
