உலகம்
|
|
|
|
மேலதிக செய்திகள்
- மலேசியாவில் நித்தியானந்தா ஆசிரமம் மூடப்பட்டது
- தொடர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி- ஆப்கனை விட்டு விலக இந்தியா முடிவு
- அல்-கொய்தாவால் இந்தியா, பிரேசிலுக்கு புதிய ஆபத்து- சிஐஏ எச்சரிக்கை
- சீன தூதுவர் - வவுனியா அரசாங்க அதிபர் சந்திப்பு
- அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி தொடர்பாடலை கண்காணிக்க புதிய செயல்முறை-ஜி.எல்.பீரிஸ்
- ஜி.எஸ்.பி பிளஸ் பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட குழு பிரஸல்ஸ் பயணம்
- பீற்றர் றிக்கெட்ஸ் - ரோஹித போகொல்லாகம சந்திப்பு
- யாழ் குடாநாட்டிற்கு ரணில் விக்கிரமசிங்க 19இல் விஜயம்
- மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் உ.ரா.வரதராசன் கொலை செய்யப்படவில்லை: போலிஸ்
- அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினருக்கான பாதுகாப்பு விலக்கப்பதற்கு கண்டனம்


ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இந்தியர்களைக் குறி வைத்துத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு விலகி விட இந்தியா முடிவு செய்திருக்கிறது.
இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் அல்-கொய்தா தீவிரவாதிகளால் புதிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளன என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ எச்சரித்துள்ளது.
இந்தோனேஷியா, ஜகத்திராவில் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சிகாகோவில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன இந்திய பெண் ஒருவரின் சடலம் ஆற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேற்குக்கரையில் உள்ள யூத குடியிருப்பு ஒன்றில் நூற்றுக்கும் அதிகமான புதிய வீடுகளை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
நைஜீரியாவின் மையப்பகுதியில் ஞாயிறன்று ஏற்பட்ட இன வன்செயல்களால் நூற்றுக்கணக்கானோர் பலியான மூன்று கிராமங்களில், ஒழுங்கை தாம் மீள நிலைநாட்டியுள்ளதாக நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரானில் மூலதன முதலீடுகளை ஊக்குவிப்பதில்லை என அமெரிக்காவின் அதிகார கொள்கையாக இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் இரானுடன் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 100 பில்லியன் டாலரை அமெரிக்க அரசு வழங்கியிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் என்ற அமெரிக்க சஞ்சிகை எழுதியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் குல்புடின் ஹெக்மத்தயார் என்ற போராளிக்குழுத் தலைவரின் படைகளுக்கும் தாலிபன்களுக்குமிடையே தீவிரமான சண்டைகள் ஆரம்பித்துள்ளன.
ஐஸ்லாண்டை சேர்ந்த ஐஸ்சேவ் வங்கி திவாலானதை தொடர்ந்து பிரிட்டன் மற்றும் நெதர்லாந்துக்கு ஐந்து பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலுத்துவதா வேண்டாமா என்பது தொடர்பான மக்கள் வாக்கெடுப்பு ஐஸ்லாண்டில் நடைபெற்று வருகிறது.

