போல் அனாகோன், ரொஜர் பெடரரின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக அனாகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த போல் அனாகோனை பரீட்சார்த்த அடிப்படையில் தனது பயிற்றுவிப்பாளராக தெரிவு செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களான பீட் சம்ராஸ் மற்றும் ரிம் ஹென்மன் ஆகியோருக்கு போல் அனாகோன் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
பிரித்தானிய ஆண்கள் டென்னிஸ் பேரவையின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அமெரிக்காவைச் சேர்ந்த போல் அனாகோன் தற்போது கடயைமாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ATPடென்னிஸ் தரப்படுத்தலின் அடிப்படையில் சுவிட்சர்லாந்தில் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர் கடந்த மூன்று மாதங்களுள் மூன்றாம் இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மிக நீண்ட இடைவெளியின் பின்னர் ரொஜர் பெடரர் உலக டென்னிஸ் தரவரிசையில் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| < முன் | பின் > |
|---|
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்
- த.தே.கூ உறுப்பினர் பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - மாவை எம்.பி
- நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
- ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்





.jpg)











