சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சர் மிஷெலிங் கெல்மி ரேய் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு லிபியா சென்றுள்ளார்.
லிபியா சென்றுள்ள சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சரை லிபிய விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு பிரதி வெளிவிவகார அமைச்சர் கால்ட் கெய்ம் வரவேற்பளித்துள்ளார்.
லிபிய சர்வதிகாரி ஹனிபல் கடாபி மற்றும் அவரது துணைவியாரான எலின்
ஆகியோர் கடந்த 2008 ஆம் ஆண்டு யூலை மாதம் சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரிலுள்ள பிரபல விடுதி ஒன்றில் வைத்து பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
ஆகியோர் கடந்த 2008 ஆம் ஆண்டு யூலை மாதம் சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரிலுள்ள பிரபல விடுதி ஒன்றில் வைத்து பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்குமிடையே பல்வேறு முரண்பாடுகளை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து சுவிட்சர்லாந்தின் பிரபல வர்த்தகரான மாஸ்கோல்டி லிபியாவில் வைத்து விசா மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவங்கள் இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் நிலையை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தருணத்தில் சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சர் மிஷெலிங் கெல்மி ரேய் லிபியா சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின்போது அவர், லிபிய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதோடு, லிபிய அரச பிரமுகர்கள் சிலருடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக லிபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சரது லிபிய விஜயத்தையடுத்து இரு நாடுகளிடையேயான உறவில் முன்னேற்றம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| < முன் | பின் > |
|---|
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்
- த.தே.கூ உறுப்பினர் பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - மாவை எம்.பி
- நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
- ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்





.jpg)











