தேர்தல் மோசடி எதிலும் தான் ஈடுபடவில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ள திரு லுமென்கோ தான் பதவி விலகப்போவதில்ல் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
Blick Abend பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர் தன் மீது சுமத்தப்பட்டிருகும் அவதூறை நிராகரித்தார். வாக்காளர்களை வாக்களிப்பதற்கு ஊக்கப்படுத்தும் நோக்குடன் அவர்கள் வாக்குச் சீட்டுகளை நிரப்புவதற்கு உதவி செய்தேன் என்று தெரிவித்துள்ள அவர் புதிதாக சுவிஸ் குடியுரிமை பெற்ற வாக்காளருக்கு வாக்கு சீட்டுகளை நிரப்புவது சிக்கலான விடயம் என்றும் அதற்காகவே தான் அவர்களுக்கு உதவி செய்தாக தெரிவித்தார். இது வருமான வரி பிரகடனப்பத்திரம் அல்லது கடிதம் எழுதுவதற்கு உதவி செய்வது போன்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாக்கு சீட்டு நிரப்புவதற்கு உதவி செய்த போது வாக்காளரின் விருப்பத்தையே பிரதி பலித்ததாகவும் வாக்காளர் அட்டையில் வாக்காளர் தானாக கையொப்பம் இட்டதையும் சுட்டிக்காட்டிய லுமென்கோ இவ்வாறான சமூக உதவி நடவடிக்கை தன்மீதான அவதூறுக்கு துணை புரிந்ததாக தெரிவித்த லுமென்கோ, இனிமேல் இவ்வாறான செயல்களில் தான் ஈடுபட மாட்டேன் என தெரிவித்தார்.
ராஜிநாமா செய்வீர்களா என்ற Blick பத்திரிகையின் கேள்விக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த அவர் ராஜிநாமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.
| < முன் | பின் > |
|---|
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
