சுவிற்சர்லாந்தின் தேசிய சபையில் உறுப்பினராக 2007 ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட அங்கோலாவை பூர்வீகமாக கொண்ட திரு றிக்கார்டோ லுமென்கோமீது தேர்தல் முறைகேட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட விசாரணை செய்யபட்டு வருவதாக இன்றைய சுவிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஊடகங்களின் தகவலின்படி திரு. லுமென்கோ கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட வாக்கு சாட்டுகளை தானாக நிரப்பியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, இவ்விடயம் பீல் நீதிமன்றால் தற்போது விசாரணை செய்யபட்டு வருகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் சூழ்நிலையில் இவர் பதவி இழக்கலாம் என தெரிக்கப்பட்டுள்ளது.
அங்கோலாவை பூர்வீகமாக கொண்ட இவர் சுவிற்சர்லாந்தின் முதல் தேசிய சபைக்கு தெரிவு செய்யபட்டு கறுப்பினத்தவர் ஆவார். சோசலிச ஜனாநாகக கட்சியைச் சேர்ந்த 47 வயதான லுமென்கோ 2006 ம் ஆண்டு நடைபெற்ற மாநகரசபைத்தேர்தலிலும் 2007 ம் ஆண்டு நடைபெற்ற தேசிய பாராளுமன்ற தேர்தலிலும் வாக்கு மோசடி செய்ததாக Bilck பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இவருக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் பற்றி ஊடகங்களில் செய்தி வெளியாகிய அதேவேளை வாக்காளர்கள் வாக்கு சீட்டுகளை நிரப்புவதற்கு திரு லுமென்கோ உதவி செய்தாரே தவிர வாக்கு மோசடிகளில் ஈடுபடவில்லை என அவர் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. வாக்காளின் சுதந்திர வாக்களிப்பில் நான் எந்த தலையீடும் செய்யவில்லை எனவும் றிக்கார்டோ லுமென்கோ சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
இதே வேளை சுவிற்சர்லாந்தில் பல வாக்கு சீட்டுகளை வேட்பாளர் நிரப்பிய சம்பவங்கள் இது முதல் முறை அல்ல என்றும் இதற்கு முன்னரும் பல அரசியல்வாதிகள் இவ்வாறு செய்துள்ளதாகவும் சில ஊடகங்களில் வேறொரு செய்தி தெரிவிக்கின்றது.
| < முன் | பின் > |
|---|
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
