கடந்த காலத்தில் இடம் பெற்ற வன்செயல்கள் காரணமாக நானும் எனது கணவரைப் பறி கொடுத்துள்ளேன். இன்று என்னைப் போன்று பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இழந்துள்ளார்கள். மனைவிமார் தமது கணவன்மாரை இழந்துள்ளார்கள். இதனைவிட எத்தனை பேர் கடத்தப்பட்டுள்ளார்கள்? காணாமல் போயுள்ளார்கள்?
இத்தகைய செயல்பாடுகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமானால், அது ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே முடியும்.
யாழ். மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் கொழும்பு-யாழ்ப்பாணம் மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் தியாகராசா மகேஸ்வரனின் மனைவியுமான விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களின் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு இன்று காலை 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்துள்ள மகேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் ஊடகவியலாளரும் யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான எஸ்.ஸ்ரீகஜனும் கலந்து கொண்டார்.
திருமதி மகேஸ்வரன் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"யாழ்ப்பாணத்தில் இன்று வாழும் மக்களுடைய தேவைகள் அதிகம். இந்த மக்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இன்று அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தமிழ் மக்களுடைய விடயத்தில் எதனையும் செய்யும் நிலைமையில் இல்லை.
வடக்கு கிழக்கில் இன்று அரசு தொடர்ந்தும் அவசரகாலச் சட்டத்தை நீடித்துக் கொண்டிருக்கின்றது. இன்று அவசர காலசட்டத் தேவை இன்றில்லை. ஆனால் அச்சட்டத்தை நீக்கினால் சிறையில் இருக்கும் பத்தாயிரம் விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய வேண்டிவரும் என அமைச்சர் மைத்திரி பால கூறியுள்ளார். இது எமது இளைஞர்களை வேதனைப்படுத்தும் ஒரு செயலாகும்.
சிறையில் வாடும் இளைஞர், யுவதிகள் மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். கடற்தொழில், விவசாயம், கைத் தொழில் என அனைத்து தொழில் முயற்சிகளும் பாதிக்கப்பட்ட நிலையே இன்று காணப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமானால் யாழ். குடா நாட்டு மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர, ஐக்கிய் தேசியக் கட்சியே வெற்றி பெற வேண்டும்" என்றார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
