தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 16,17 ஆம் திகதிகளில் இராணுவ நீதிமன்றத்தினால் விசாரணை செய்யப்படவுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இராணுவ தளபதி ஜகத் ஜயசூரியவின் கீழ் இரு நீதிமன்றங்கள் இதற்கென ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இதனை தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர்,

“ஜெனரல் சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினர் இரண்டு நீதிமன்றங்களையும் இயக்குவர்.

அந்தக் குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் எச்.சி.வீரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவச் சட்டத்தின் 124 ஆவது பிரிவு மற்றும் 102 (1) ஆகிய பிரிவு சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக ஒரு நீதிமன்றில் அவர் விசாரிக்கப்படுவார்.

கடமையில் இருக்கும்போது அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இங்கு முக்கியமாக விசாரிக்கப்படும். மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் மற்றைய நீதிமன்றில் விசாரணை செய்யப்படும்.

எதிர்வரும் 16,17ஆம் திகதிகளில் கடற்படைத் தலைமையகத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன” என்றார்.

 

 
  1. றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
  2. அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
  3. விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
  4. வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
  5. நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
  6. டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
  7. பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
  8. இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
  9. சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
  10. தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009