இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் அம்பாறை மாவட்ட சபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டுள்ளதற்கு எதிராக மாகாண சபை அமர்வின்போது கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு விலக்கப்படுள்ளமை தங்களுக்கு பெரும் உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் அம்பாறை மாவட்ட உறுப்பினரான புஷ்பராசா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரும் தீர்மானம் ஒன்று மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக மற்றொரு சபை உறுப்பினரான துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனக்கான பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளருடன் பேசியதாகவும், நல்ல முடிவு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
