ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லியான் பெஸ்கோவின் இலங்கை விஜயத்தின் பின்னர், நிபுணர்கள் குழு அமைக்கப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லியான் பெஸ்கோ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தனர்.
லியான் பெஸ்கோவின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் தகவல்களை திரட்டிவருவதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
லியான் பெஸ்கோவின் இலங்கை விஜயத்திற்கான திகதியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் தீர்மானிப்பார் எனவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்கக்கூடியவர்களின் பெயர் விபரங்களை பான்கீமூன் உத்தியோகப் பற்றற்ற முறையில் தயாரித்துவருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை, எந்தவொரு நிபுணர்கள் குழுவையும் இதுவரையில் பான்கீமூன் நியமிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
