18வது திருத்த சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்

18வது திருத்த சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்

இலங்கை அரசினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 18ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.

எம்.எஸ்.ரமேஷ் 06 செப் 2010

 திருமலையில் தமிழ் மாணவன் கடத்தல் -மீண்டும் தொடரும் கடத்தல் சம்பவம்

திருமலையில் தமிழ் மாணவன் கடத்தல் -மீண்டும் தொடரும் கடத்தல் சம்பவம்

திருகோணமலையில் பாடசாலை மாணவன் ஒருவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸில் பெற்றேர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எம்.எஸ்.ரமேஷ் 06 செப் 2010


காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.

இந்த டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு டெஸ்ட் போட்டியின் தொடக்கம் முதலே இருந்தது. இன்று பிற்பகல் வரை அவர் 799 விக்கெட்களுடன் இருந்தார் முரளி.

பிற்பகல் 2 மணியளவில் முரளிதரன் தனது உலக சாதனையை நிகழ்த்தினார். அவரது 800வது விக்கெட்டாக பிரக்யான் ஓஜா அவுட் ஆனார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை முரளிதரன் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

முரளிதரன் நிகழ்த்திய உலக சாதனையை அவரது மனைவி மதிமலர், அவரது குடும்பத்தினர், மகன் உள்ளிட்டோர் நேரில் கண்டு குதூகளித்தனர். 800வது விக்கெட்டை முரளிதரன் வீழ்த்தியதும், ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் குதித்தனர். மைதானத்தில் விழாக்கோலம் காணப்பட்டது.


 


10 வி. வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

முன்னதாக, காலேவில் நடந்த இந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்து. 2வது நாள் ஆட்டம் நடக்கவே இல்லை. முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 520 ரன்கள் எடுத்து இலங்கை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா சடசடவென விக்கெட்களை இழந்து 276 ரன்களில் வீழ்ந்தது.

முதல் இன்னிங்ஸில் ஷேவாக் சதம் போட்டார். அவர் 109 ரன்களை எடுத்தார். டெண்டுல்கர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. 2வது இன்னிங்கிலும் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் சொதப்பியது. ஷேவாக், கம்பீர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். டிராவிட் நிதானமாக ஆடி44 ரன்களை எடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடாத சச்சின் இந்த முறை 84 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இன்னிங்ஸ் தோல்வி என்ற பெரும் அபாயத்தை நோக்கி இந்தியா போய்க் கொண்டிருந்த நிலையில், லட்சுமண் ரூபத்தில் இந்தியாவுக்கு நிம்மதி வந்தது. மிக மிக நிதானமாக ஆடி வரும் லட்மண் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க உதவினார்.

அவரும், இஷாந்த் சர்மாவும் நிதானமாக ஆடி இந்தியாவின் சரிவை நிறுத்தினர். இதன் காரணமாக இலங்கையை விட 94 ரன்கள் முன்னிலை இந்தியாவுக்குக் கிடைத்தது.

லட்சுமண் 69 ரன்களும், இஷாந்த் சர்மா ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் எடுத்தனர். இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 338 ரன்களுக்கு இழந்தது.

95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை தனது 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் சதம் போட்ட பரவனவிதனா 23 ரன்களை எடுத்தார். திலகரத்னே தில்ஷன் 68 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.

இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.

ஆட்ட நாயகனாக லசித் மலிங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நினைவுப் பரிசு வழங்கிய ராஜபக்சே:

முரளிதரன் உலக சாதனையோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றதையொட்டி அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதை இலங்கை அதிபர் ராஜபக்சே நேரில் வந்து வழங்கி முரளிதரனைப் பாராட்டினார். போட்டியின் இறுதி நாளில் அவர் மைதானத்திலிரு்நது வந்திருந்து போட்டியையும் பார்த்தார்.

விடைபெற்றார் முரளிதரன்

இந்தப் போட்டியோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் முரளிதரன். போட்டியின் முடிவில் அவர் பேசுகையில், தனக்கு ஆதரவாக இருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார். மேலும், மனைவி, குடும்பத்தினர், முன்னாள், இன்னாள் வீரர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்து விடைபெற்றார்.

முரளிதரன் ஒரு பார்வை...

132 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
 
அதேபோல 334 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 512 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

முதல் தர போட்டிகளில் 1366 விக்கெட்களையும் அவர் சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  1. லண்டனில் தமிழ் மக்களை சந்தித்தார் டேவிட் மிலிபாண்ட்
  2. கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழா
  3. திஸ்ஸநாயகத்தின் அடிப்படை உரிமை மனு வாபஸ்
  4. இலங்கையில் மிகமோசமான நிலையில் மட்டக்களப்பு மாநகரம் –முதலமைச்சர் கவலை
  5. சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? அந்நாட்டில் நிபுணர்கள் ஒன்பது பேர் ஆய்வு
  6. படகு மூலம் கனடா செல்ல முற்பட்ட 6 தமிழுறவுகள் பலி
  7. எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வரைஎதிர்காலத்திலும் போட்டியிடுவேன் : ஜனாதிபதி
  8. நிகழ்வொன்றில் டெய்லி மிரர் ஊடகவிலாளர்களை வெளியேற்றிய மேர்வின் சில்வா
  9. பாக். பொலிஸ் நிலையம் மீது குண்டுத்தாக்குதல் ; 20 பேர் பலி
  10. முல்லைத்தீவில் விமான எதிர்ப்பு துப்பாக்கி உட்பட பெருந்தொகையான வெடிபொருள்கள் மீட்பு
Back to Top
சுவிஸ் செய்தி
News image

சுவிஸில் இலங்கையைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கு பிரஜாவுரிமை

சுவிஸில் இவ்வருடம் இலங்கைக் குடும்பங்களுக்கு 24 இற்கு பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இப்பிரஜாவுரிமைக்கு 435 வெளிநாட்டுக் குடும்பங்கள் விண...

Saturday, 4 September 2010

விரிவு...
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ...

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1

உலகச் செய்தி
News image

பாக். பொலிஸ் நிலையம் மீது குண்டுத்தாக்குதல் ; 20 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 20  பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Monday, 6 September 2010

விரிவு...
News image

டோனி பிளேயர் மீது சப்பாத்து,முட்டை வீச்சு

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி  பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Saturday, 4 September 2010

விரிவு...
News image

நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி

நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

Saturday, 4 September 2010

விரிவு...

இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து

இங்கிலாந்தின் லெய்ஸ்டஷயர்  பிராந்தியத்திலுள்ள ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் வெடிப்புச் சம்பவமொன்றுடன் பாரிய தீ பரவ ஆரம்பித்ததாக தீயணைப்புத் துறையினர் தெர...

Saturday, 4 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழா

கவிஞர் வைரமுத்து-பொன்மணி வைரமுத்து தம்பதியரின் இளைய மகனான கபிலன் மற்றும் திருச்சி மாவட்ட நீதிபதி எம்.மாயாண்டி, பேராசிரியை அமுதா ஆகியோரின் மகள் டாக்டர் ரம்யா ஆகியோருக்கு, சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று திருமணம் ...

Monday, 6 September 2010

விரிவு...

மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் சென்னையில் இடம்பெற்றது

மறைந்த தமிழ் தலைவர் ஏ.எஸ்.மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் அண்மையில் தமிழ் நாட்டில் இடம்பெற்றது.

Saturday, 4 September 2010

விரிவு...
News image

இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட...

Friday, 3 September 2010

விரிவு...
-
+
1
பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch