.jpg)
கொழும்பில் பயிற்சி பெற்றதாக லக்ஷர் ஈ தொய்பா அங்கத்தவர் தெரிவிப்பு
இந்தியாவின் புனே நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் கொழும்பிலுள்ள சுற்றுலாப் பகுதியொன்று லக்ஷர் ஈ தொய்பா அமைப்பிற்கான பயிற்சித் தளமாக விளங்குவதாக விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக ஏசியன் ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 09 செப் 2010

18 ஆவது திருத்தம் நிறைவேற்றம்:2/3 பெரும்பான்மையை பெற்றது
8 ஆவது அரசியல்யாப்பு சட்டமூலம் தொடர்பில் அரசு 161 ஆதரவான வாக்குகளை பெற்று பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுகொண்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 08 செப் 2010
ஸ்பெய்ன் அணி பீபா உலகக் கிண்ண மகுடத்தை சூடிக் கொண்டுள்ளது. முதல் தடவையாக ஸ்பெய்ன் அணி உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென் ஆபிரிக்காவின் ஜொஹனர்ஸ் பேர்க் நகரின் சொக்கர் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியை பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் கண்டு களித்தனர்.
இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெய்ன் வெற்றியீட்டியது.
2008ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்களாக ஸ்பெய்ன் அணி முதல் உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப் போட்டி வரையில் முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் உத்தியோகபூர்வ நேரம் முடிவடையும் வரையில் கடுமையான போராடிய இரண்டு அணிகளினாலும் கோல் எதனையும் போட முடியவில்லை.
முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் ஸ்பெய்ன் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு கிட்டிய சில அரிய சந்தர்ப்பங்கள் துரதிஸ்டவசமாக கோல்களாக மாற்றப்படவில்லை.
பின்னர் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் முதல் பாதியிலும் இரண்டு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை.
மேலதிக நேரத்தின் இரண்டாம் பகுதியில் நெதர்லாந்தின் ஜோன் ஹெட்டின்கா சிகப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இதன் பின்னர் பத்து பேருடன் போராடிய நெதர்லாந்து அணி இறுதி நேரத்தில், ஸ்பெய்ன் அணிக்கு கோல் ஒன்றை வழங்கி தோல்வியடைந்தது.
ஸ்பெய்ன் அணியின் அன்ட்ரேஸ் இனிசிட்டாவினால் போட்டியில் பதிவு செய்யப்பட்ட ஒரே கோல் போட்டப்பட்டது.
உலகக் கிண்ணப் போட்டியில் ஆகக் குறைந்த எண்ணிக்கையிலான கோல்களைப் போட்டு கிண்ணத்தை சுவீகரித்த அணி என்ற பெருமையை ஸ்பெய்ன் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்தப் போட்டித் தொடர் முழுவதிலும் ஸ்பெய்ன் அணி வெறுமனே எட்டு கோல்களை மட்டுமே போட்டுள்ளதுடன், ஸ்பெய்ன் அணிக்கு எதிராக மொத்தமாக இரண்டு கோல்கள் மட்டுமே போடப்பட்டுள்ளன.
எதிரணிகளுக்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கோல்களை வழங்கி கிண்ணத்தை சுவீகரித்த நாடு என்ற உலக சாதனையை ஸ்பெய்ன் அணி தனதாக்கிக் கொண்டுள்ளது.
ஐரோப்பாவிற்கு வெளியே ஐரோப்பிய அணியொன்று முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1974 மற்றும் 1978ம் ஆண்டுகளிலும் நெதர்லாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுக் கொண்ட போதிலும் சாம்பியன் பட்டத்தை சுவீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிளி ஜோசியம் மற்றும் சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒக்டோபஸ் போன்ற பல்வேறு ஆரூடங்களில் நெதர்லாந்து அணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த ஆரூடங்களை பொய்ப்பிக்கும் வகையில் மேலதிக நேரத்தில் கோல் ஒன்றைப் பேட்டு ஸ்பெய்ன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
முதல் சுற்றுப் போட்டியிலிருந்து முன்னேறுமா என்ற சந்தேகத்துடன் காணப்பட்ட ஸ்பெய்ன் அணி இறுதிப் போட்டி வரையில் முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான முதலாது போட்டியிலேயே ஸ்பெய்ன் அணி தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்
- த.தே.கூ உறுப்பினர் பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - மாவை எம்.பி
- நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
- ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்





.jpg)











