
இலங்கையில் தமிழ் எழுத்தாளர் மாநாடு வேண்டாம் பேராசிரியர் க.சிவத்தம்பி
இலங்கையில் நடைபெறவுள்ள தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என தமிழறிஞர் கா.சிவத்தம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எம்.எஸ்.ரமேஷ் 05 செப் 2010

"தமிழர்களின் தேவைகளை கவனிக்க"இலங்கைக்கு விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம்
இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை இந்திய அரசு நியமிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தமிழ் சமூகத்தின் தேவைகளைக் கவனிக்கவும் மீள்குடியேற்றத்தை மேற்பார்வை செய்யவும் விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
எம்.எஸ்.ரமேஷ் 04 செப் 2010
உலகம் முழுவதும் கோடானு கோடி கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. வெல்லப் போவது நெதர்லாந்தா, ஸ்பெயினா என்ற வாதம் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த உலகக் கோப்பைக் கால்பந்து திருவிழா இன்றுடன் முடிவடைகிறது. இதன் இறுதிப் போட்டியில் ஐரோப்பிய அணிகளான நெதர்லாந்தும், ஸ்பெயினும் மோதுகின்றன.
இரு அணிகளுமே இந்தத் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை காட்டி வருகின்றன. எனவே இறுதிப் போட்டியில் கண்டிப்பாக தீப்பொறி பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நேருக்கு நேர்...
நெதர்லாந்தும், ஸ்பெயினும் இதுவரை 9 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஆளுக்கு நான்கு போட்டிகளில் வென்றுள்ளனர். ஒரு போட்டி டிரா ஆனது. இரு அணிகளும் சம பலம் பொருந்தியவையாக உள்ளதால், எந்த அணி வெல்லும் என்பதை கணிக்க முடியாததாக உள்ளது.
நெதர்லாந்து அணி 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு 1974ல் ஜெர்மனியுடனும், 1978ல் அர்ஜென்டினாவுடனும் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மோதியது. இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது.
தற்போது 3வது முறையாக வந்துள்ள நெதர்லாந்து, எப்படியும் வெல்லும் உறுதியுடன் களத்தில் நிற்கிறது.
மறுபக்கம், ஸ்பெயின் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.
இரு அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால் யார் வென்றாலும் அது அந்த அணிக்கு பெரும் சாதனையாகும்.
இன்றைய இறுதிப் போட்டியில் டேவிட் வில்லாவுக்கும், நெதர்லாந்தின் வெஸ்லி ஸ்னீடருக்கும் இடையே நடைபெறப் போகும் மோதல் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இருவரும் ஆடிய விதத்தை வைத்துத்தான் அவர்களது அணிகள் சம்பந்தப்பட்ட போட்டிகளில் வென்றுள்ளன என்பதால் இவர்களில் யார் அஏட்டகாசமாக ஆடுகிறார்களோ அந்த அணியே போட்டியில் வெல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
8வது ஐரோப்பிய அணிகளின் இறுதிப் போட்டி...
ஐரோப்பிய அணிகளே இறுதிப் போட்டியில் மோதுவது இது முதல் முறையல்ல. இது 8வது முறையாகும். இதுவரை நடந்துள்ள 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் 16 முறை இறுதிப் போட்டிக்கு ஐரோப்பிய அணிகள் முன்னேறியுள்ளன. இது ஒரு சாதனையாகும்.
இரண்டு முறை மட்டுமே தென் அமெரிக்க அணிகள் மட்டுமே மோதிய இறுதிப் போட்டியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோப்பையை வெல்லும் 8வது அணி...
இன்றைய இறுதிப் போட்டியில் வெல்லும் அணி உலகக்கோப்பையை வெல்லும் 8வது அணியாக உருவெடுக்கும்.
இதற்கு முன்பு பிரேசில் (5 முறை), இத்தாலி (4), ஜெர்மனி (3), உருகுவே (2), அர்ஜென்டினா (2), இங்கிலாந்து (1), பிரான்ஸ் (1) ஆகிய நாடுகள் கோப்பையை வென்றுள்ளன.
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முடியுமானால் ஜனாதிபதிக்கு ஏன் முடியாது?
- அம்பாறையில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி
- விடுதலை கோரி மகஸின் தமிழ் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
- முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பதுளையில் கைது
- யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் முழுமையான பாதுகாப்பு சூழல் இல்லை – களுவாஞ்சிகுடி பிரதிப் பொலிஸ் அத்தியட்சர்
- வி.தர்மலிங்கத்தின் 25வது நினைவு தின நிகழ்வுகள்
- டோனி பிளேயர் மீது சப்பாத்து,முட்டை வீச்சு
- ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் கடத்தலை ஏற்றுக்கொள்ளமுடியாது –த.ம.வி.புலிகள் கட்சி அறிக்கை
- தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம், த.தே.கூட்டமைப்புடன் ஐ.தே.க. ஒத்துழைக்கும் : ரணில்
- வீரவில சிறைச்சாலையிலிருந்து தப்பியொடிய கைதி மட்டக்களப்பில் கைது





.jpg)




.jpg)




