
18வது திருத்த சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்
இலங்கை அரசினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 18ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 06 செப் 2010

திருமலையில் தமிழ் மாணவன் கடத்தல் -மீண்டும் தொடரும் கடத்தல் சம்பவம்
திருகோணமலையில் பாடசாலை மாணவன் ஒருவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸில் பெற்றேர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 06 செப் 2010
FIFA உலகக் கிண்ணக் கால்பாந்தாட்டத் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள தருணத்தில் இறுதிப் போட்டிக்கு நுழையும் அணிகள் தொடர்பாக ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் குகைய உலகக் கிண்ணக் கால்பாந்தாட்டத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளன. நாளைய தினம் நடைபெறவுள்ள போட்டியில், உருகுவே – நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன.
FIFA உலகக் கிண்ணக் கால்பாந்தாட்டத் தொடரின் மற்றைய அரையிறுதிப் போட்டியில், ஜேர்மனி - ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன.
இந்தநிலையில், ஜேர்மனி - ஸ்பெயின் அணிகளுக்கிடையிலான போட்டி விறுவிறுப்பாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காலிறுதிப் போட்டியில், ஜேர்மனி அணி முன்னாள் சம்பியனான அஜன்டீனா அணிய படுதோல்வியடையச் செய்திருந்தது. அந்தப் போட்டியில், 4 ற்கு 0 என்ற கணக்கில் ஜேர்மனி வெற்றிபெற்றிருந்ததோடு, சுப்பர் 16 சுற்றின்போது இங்கிலாந்து அணியை 4 ற்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்திருந்தது. மேலும், முதலாவது சுற்றில் அவுஸ்திரேலியாவை 4 ற்கு பூச்சியம் என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இருந்தும், ஸ்பெயின் அணியும் சளைத்ததல்ல என்பதை நிருபித்துள்ளது. தான் எதிர்கொண்ட போட்டிகளில் சுவிட்சர்லாந்துடனான போட்டி ஒன்றில் மட்டுமே தோல்வியைத் தழுவ, ஏனைய போட்டிகளில் இலகுவதாக வெற்றிபெற்றிருந்தது.
மேலும், மற்றைய அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ள உருகுவே – நெதர்லாந்து ஆகிய இரு அணிகளும் பலம்வாய்ந்த அணிகளாகவே உள்ளன. உருகுவே அணி முதலாவது சுற்றுப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை 3 ற்கு பூச்சியம் என்ற கோல் கணக்கிலும், மெக்ஸிக்கோ அணியை ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கிலும் தோற்கடிந்திருந்துதோடு, பிரான்ஸ_டனான போட்டியை மட்டுமே சமன் செய்திருந்தது.
உருகுவே அணியுடன் இரையிறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ள நெதர்லாந்து அணியும் தானும் சழைத்ததல்ல என்பதையும் நிருபித்துள்ளது. நெதர்லாந்து அணி, முதலாவது சுற்றில் டென்மார்க்கை 2 ற்கு பூச்சியம் என்ற கோல்கள் கணக்கிலும், ஜப்பானை ஒன்றிற்கு பூச்சியம் என்ற கோல் கணக்கிலும், கமருனை 2 ற்கு ஒன்று கோல் கணக்கிலும் தோற்கடித்திருந்தது. மேலும், சுப்பர் 16 சுற்றில் பலம்வாய்ந்த பிரேஸிலை 2 ற்கு ஒன்று என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்து.
இந்தநிலையில், இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கான பலப்பரீட்சையில் இந்த நான்கு அணிகள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் களமிறங்கவுள்ளன.
இந்தப் பலப் பரீட்சையில் தோல்வியடையும் இரு அணிகள் எதிர்வரும் 10 திகதி நடைபெறவுள்ள 3 ஆம் 4 ஆம் நிலைக்கான போட்டியில் பங்கேற்கும். வெற்றிபெறும் இரு அணிகளும் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.
- லண்டனில் தமிழ் மக்களை சந்தித்தார் டேவிட் மிலிபாண்ட்
- கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழா
- திஸ்ஸநாயகத்தின் அடிப்படை உரிமை மனு வாபஸ்
- இலங்கையில் மிகமோசமான நிலையில் மட்டக்களப்பு மாநகரம் –முதலமைச்சர் கவலை
- சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? அந்நாட்டில் நிபுணர்கள் ஒன்பது பேர் ஆய்வு
- படகு மூலம் கனடா செல்ல முற்பட்ட 6 தமிழுறவுகள் பலி
- எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வரைஎதிர்காலத்திலும் போட்டியிடுவேன் : ஜனாதிபதி
- நிகழ்வொன்றில் டெய்லி மிரர் ஊடகவிலாளர்களை வெளியேற்றிய மேர்வின் சில்வா
- பாக். பொலிஸ் நிலையம் மீது குண்டுத்தாக்குதல் ; 20 பேர் பலி
- முல்லைத்தீவில் விமான எதிர்ப்பு துப்பாக்கி உட்பட பெருந்தொகையான வெடிபொருள்கள் மீட்பு





.jpg)






.jpg)



