
தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
இந்திய - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களை உலகத் தமிழர்கள் புறக்கணிக்குமாறு சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.
வா.கி.குமார் 29 ஜூலை 2010

வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை
கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப்புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
வா.கி.குமார் 28 ஜூலை 2010
உலகக் கோப்பை ஹாக்கியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொரிய அணியை நியூசிலாந்து வீழ்த்தியது.
நியூசிலாந்து அணி 2 கோல்கள் அடித்தது. கொரிய வீரர்களால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது.
இந்த வெற்றி மூலம் இந்த போட்டியில் தனது நியூசிலாந்து தனது 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கொரியா அணிக்கு இது முதல் தோல்வியாகும்.
ஆட்டம் தொடங்கியது முதலே நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினர். கடந்த 2 போட்டிகளில் சிறப்பாக அமைந்த கொரிய வீரர்களின் ஆட்டம், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் எடுபடவில்லை.
ஆட்டத்தின் 4-வது நிமிடத்திலேயே நியூசிலாந்து வீரர் ஆன்ட்ரு ஹெய்வர்ட் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலையைப் பெற்றுத் தந்தார்.
தொடர்ந்து 22 நிமிடத்தில் நியூசிலாந்து மற்றொரு கோல் அடித்து தனது முன்னிலையை 2-0 என்ற கணக்கில் வலுப்படுத்திக் கொண்டது. முதல் பாதியில் கடுமையாக முயற்சித்தும் கொரிய வீரர்களால் கோல் எதும் அடிக்க முடியவில்லை.
இரண்டாவது பாதி ஆட்டத்திலும் நியூசிலாந்து வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோல் அடிக்க கொரிய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.
ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் தென்கொரியாவுக்கு கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை பயன்படுத்தி லீ நாம் கோல் அடித்தார். இந்த ஒருகோல் மூலமே தென்கொரியா திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
இறுதியில் நியூசிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த வெற்றி மூலம் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை உறுதிபடுத்திக் கொண்டுள்ளது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது நியூசிலாந்து. அடுத்து ஆர்ஜெண்டீனாவையும், ஜெர்மனியையும் நியூசிலாந்து எதிர்கொள்ளவுள்ளது.
தென்கொரியாவுக்கு இது மூன்றாவது ஆட்டமாகும். இதுவரை ஒரு வெற்றி, ஒரு தோல்வியை அந்த அணி சந்தித்துள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.
இனி வரும் ஆட்டங்களில் கனடாவையும், நெதர்லாந்தையும் தென்கொரியா எதிர்கொள்ள இருக்கிறது. இதில் பெறும் வெற்றிகளைப் பொருத்துதான் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு அமையும்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)



.jpg)
