
தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
இந்திய - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களை உலகத் தமிழர்கள் புறக்கணிக்குமாறு சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.
வா.கி.குமார் 29 ஜூலை 2010

வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை
கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப்புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
வா.கி.குமார் 28 ஜூலை 2010
டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலாமிடத்தில் திகழ்கிறது. இதனை தக்க வைக்க இந்தத் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். 2ஆவது இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்கா 2க்கு0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே முதல் இடத்தைப் பிடிக்கும். 1க்கு 0 என்ற கணக்கில் வென்றால் இரு அணிகளும் 123 புள்ளிகளுடன் சமநிலையைப் பெறும்.
தாடையில் ஏற்பட்ட காயம் காரணமாக டிராவிட் இந்த தொடரில் ஆடவில்லை. எனவே ட்ராவிட்டுக்குப் பதிலாக இளம் வீரர் பத்ரிநாத்துக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பீர், டெண்டுல்கர் துடுப்பாட்டத்தில் பலம் பெற்று காணப்படுகிறார்கள். இருவரும் பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் சதம் அடித்தனர். அதிரடி துடுப்பாட்ட வீரர் ஷேவாக்கின் தொடக்கத்தைப் பொறுத்து ஓட்ட குவிப்பு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பந்து வீச்சில் சாஹீர்கான் இஷாந்த் சர்மா ஆகியோர் பங்களாதேஷ் தொடரில் முத்திரை பதித்தனர். தென் ஆபிரிக்காவுக்கு எதிராகவும் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் காலிஸ் அணித்தலைவர் சுமித் ஹசிம் அம்லா, டிவில்லியர்ஸ் ஆகியோரும் பந்து வீச்சில் ஸ்டெய்ன், பர்னல், மார்கல் ஆகியோரும் முத்திரை பதிக்கக் கூடியவர்கள். அந்த அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்திய அணி சமீபத்தில் பங்களாதேஷை 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது.
தொடர்ந்து 6ஆவது டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது. தென் ஆபிரிக்க அணி இறுதியாக 2008ஆம் ஆண்டு இந்தியாவில் விளையாடியது. 3 டெஸ்ட் தொடர் கொண்ட போட்டியில் 1 -1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
வீரர்கள் விபரம்
இந்தியா: டோனி (கேப்டன்) ஷேவாக், காம்பீர், முரளி விஜய், தெண்டுல்கர், லட்சுமண், பத்ரிநாத், ரோகித் சர்மா, ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், அமித் மிஸ்ரா, சுதிப் தியாகி, ஒஜா, அபிமன்யூ மிதுன், விர்த்திமான் சகா.
தென் ஆபிரிக்கா: சுமித் (கேப்டன்), ஹசிம் அம்லா, ஆஸ்வெல் பிரின்ஸ், டிவில்லியர்ஸ், காலிஸ், டுமினி, பீட்டர்சன், பவுச்சர், ஹாரிஸ், போத்தா, மெக்லரன், மார்னே மார்கல், பர்னல், ஸ்டெய்ன்இ சோட்சோபே.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)



.jpg)
