தமிழின படுகொலையை யாருமே கண்டுகொள்ளாமல் இருந்த வேளையில் உலக சமுகத்தை திரும்பிபார்க்க வைக்கும் நோக்கோடு அவரின் வதிவிடமான பிரித்தானியாவில் இருந்து உலகத்தலைவர்கள் ஒன்றுகூடும் இடமான ஐக்கிய நாடுகள் சபை முன்பாக, என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்கள் மனச்சாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகிறேன் என்ற கூற்றை முன்வைத்து தமிழ் மக்களின் விடுதலைக்காய் தன்னுயிரை தீக்கிரையாக்கினார்.



வீரத்தமிழன் முத்துக்குமார் தொடக்கம் ஈகைப்பேரொளி முருகாதசன் உட்பட்ட பத்தொன்பது தியாகிகளின் முதலாமாண்டு நினைவையொட்டி ஈகைப்பேரொளி முருகதாசன் தன்னைத் தானே தீமுட்டிய ஐக்கிய நாடுகள் சபை முன்பாக வணக்க நிகழ்வு நடைபெற இருக்கின்றது.


ஜெனிவா தொடருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 13.30 மணிக்கு ஐக்கியநாடுகள் சபை நோக்கி ஊர்வலமாக சென்று ஈகைப்பேரொளிகளுக்கு மலர்வணக்கம் நடைபெற உள்ளது. தீக்கிரையாக்கிய இவர்களை நினைவுகூர்ந்தும் தமிழர்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் அனைத்து மனித உரிமைமீறல்களையும் சர்வதேசம் தடுத்துநிறுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாளை (13.02.2010) ஊர்வலம் நடைபெற உள்ளது- இவ் ஊர்வலத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஐரோப்பா இளையோர்கள் வேண்டி நிற்க்கின்றனர்.
செய்தி இணைப்புக்கள்
|
|
|
|
|
|
|
|
![]() அன்பான தமிழ்பேசும் உறவுகளே நாம் விழிக்காவிட்டால் எமது அடையாளத்தை தொலைத்துவிடுவோம் ......முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான். இனியாவது ஒரே அணியில் எல்லோரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே! |



.jpg)















.jpg)

