வன்னியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மிகப்பெரிய மனிதப் படுகொலையைக் கண்டித்து சுவிஸ் தலைநகர் பேரண் மாநகரில் நாடாளுமன்ற முன்றலில் கூடி ஈழத் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இலங்கையில் சிங்கள அராங்கத்தின் கொலைவெறித்தாக்குதலைக்கண்டித்தும் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் ஒஸ்ரியா,டென்மார்க்,சுவிற்ஸர்லாந்து,பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் கடந்த 14 நாட்களாக இடம்பெற்றுவரும் தமிழர்களின் போராட்டத்தை கலைப்பதற்கு திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டுவந்த முயற்சியை முறியடிக்கும் விதமாக இன்று அதிகாலை தொடக்கம் பாராளுமன்ற வீதியையும் பாராளுமன்ற சதுக்கத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இனவாதத்துக்கு எதிரான ளழள அமைப்பின் ஏற்பாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இனவாத எதிர்ப்பு ஊர்வலம் சனி பிற்பகல் ஜெனிவா மாநகரில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
சிறீலங்கா அரசு தமிழினப் படுகொலையை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து சுவிஸ் தமிழ் இளையோர்கள் நேற்று (18.04 சனிக்கிழமை) சூரிச்சில் ஊர்திக் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
வன்னியில் உடனடிப் போர்நிறுத்தம், அங்கே அல்லல்படும் மக்களுக்கு உடனடி மருத்துவ உதவி உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் நேற்று புதன்கிழமை காவல்துறையினரால் பலாத்காரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
கவிஞர் வைரமுத்து-பொன்மணி வைரமுத்து தம்பதியரின் இளைய மகனான கபிலன் மற்றும் திருச்சி மாவட்ட நீதிபதி எம்.மாயாண்டி, பேராசிரியை அமுதா ஆகியோரின் மகள் டாக்டர் ரம்யா ஆகியோருக்கு, சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று திருமணம் ...
கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட...
உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...
காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...