ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் ஊடகங்களுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் முடுக்கிவிடப்பட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஊடகவியலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு, ஊடக அடக்குமுறைக்கு எதிரான அமைப்பு, உட்பட ஊடக அமைப்புக்கள் பலவும் இணைந்தே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

"லங்கா ஈ நியூஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் பிரகீத்தை விடுதலைசெய்", "லங்கா பத்திரிகை ஊடகவியலாளர் சந்தன சிறமல்வத்தையை விடுதலைசெய்", "ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்து", "சுதந்திர ஊடகத்தை கட்டுப்படுத்துவதை நிறுத்து" போன்ற கோஷங்களை ஊடகவியலாளர்கள் எழுப்பியதைக் காணமுடிந்தது.

(pix by dailymirror)
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திர ஊடவியலாளர்களுக்கான தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் தர்மசிறி லங்கா பேலி கருத்துத் தெரிவிக்கையில், "நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்து ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட அரசாங்கம் இடமளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

(pix by dailymirror)
அண்மைக்காலத்தில் கொழும்பில் ஊடகவியலாளர்கள் நடத்திய பாரிய ஆர்ப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”செவ்வாய், 8 டிசம்பர் 2009 |
மகிந்த – பொன்சேகா போட்டி – வெளிக்கொணரவுள்ள உண்மைகள்செவ்வாய், 1 டிசம்பர் 2009 |
தமிழர்களின் எதிர்பார்ப்பும், மாவீரர்தினமும்.செவ்வாய், 24 நெவம்பர் 2009 |
புலம்பெயர் மக்களே ஒன்று சேருங்கள் ............செவ்வாய், 17 நெவம்பர் 2009 |
|
|
ரஷ்யாவின் சிறி லங்காவுடனான ஒப்பந்தம்: அடுத்த குளிர்கால போருக்கான ஒத்திகையா? அனலை நிதிஸ் ச. குமாரன்ஞாயிறு, 14 பெப்பரவரி 2010 |
முழு மூச்சுடன் வேட்டையில் இறங்கியுள்ள மகிந்தசெவ்வாய், 2 பெப்பரவரி 2010 |
வரலாற்றுத் துரோகம் இழைக்குமா?வெள்ளி, 11 டிசம்பர் 2009 |














