தமிழ் நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்காகவோ அல்லது சொந்த காரணங்களுக்காகவோ இலங்கைக்கு செல்லக்கூடாது என்று திரையுலகில் சிலர் கூறிவருகின்றனர். அப்படி தடுப்பது தவறு என இன்னொரு தரப்பு கூறுகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தலையிட்டு, இலங்கை செல்லும் நடிகர் நடிகைகளின் படங்களை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளது. இதில் 30 தமிழ் அமைப்புகள் உள்ளன.
இலங்கைக்கு செல்லும் தமிழ் நடிகர், நடிகைகளின் படங்களை அமெரிக்காவில் திரையிட விடமாட்டோம் என கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
பிரிட்டன், கனடா நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளும் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக அசின் நடித்து வெளியாக உள்ள படத்தை புறக்கணிப்போம் என அமெரிகக தமிழ் அமைப்புகளின் தலைவர் பழனி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் சித்திக் இயக்கும் படம் காவல் காதல். இதில் அசின் நடித்துள்ளார். தமிழ் படங்கள் வெளிநாடுகளில் அதிக வசூல் ஈட்டுகின்றன.
இந்நிலையில் தமிழ் அமைப்புகளின் முடிவால் விஜய் படத்தை அங்கு திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்
- த.தே.கூ உறுப்பினர் பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - மாவை எம்.பி
- நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
- ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்





.jpg)











