கருத்துக்கணிப்புக்கு தமிழர்களின் நிலை என்ன இப்போது? நாடுகடந்த அரசாங்கமா?' என்று தலைப்பு இடப்பட்டுள்ளது. அக்கருத்துக்கணிப்பு தமிழர்கள் தங்களது சொந்த அரசாங்கத்தை இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் நிறுவுவதற்கு எவ்வாறான ஆயத்தம் செய்ய வேண்டும் என்பதைத் தமிழர்களிடம் கேட்கிறது. அக்கருத்துக்கணிப்பு "'நாடு கடந்த அரசாங்கம்" மற்றும் "புகலிட அரசாங்கம்" ஆகிய சொற்றொடர்களை விளக்கும்உரைகளைக் கொண்டுள்ளது.

 ஒபாமாவுக்கான தமிழர்கள்  இன்றிலிருந்து ஒரு கருத்துக்கணிப்பை ஆரம்பித்துள்ளார்கள். அக்கருத்துக்கணிப்பு புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தமிழர்கள் தங்களது சொந்த அரசாங்கத்தை இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் நிறுவுவதற்கு எவ்வாறான ஆயத்தம் செய்ய வேண்டும் என்று கேட்கிறது.

 இக்கருத்துக்கணிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பங்கெடுக்கலாம்.

 இக்கருத்துக்கணிப்பில்  "நாடு கடந்த அரசாங்கம்" மற்றும் "புகலிட அரசாங்கம்" ஆகிய சொற்றொடர்களை விளக்கும் உரைகளைக் கொண்டுள்ளது. இச்சொற்றொடர்கள் அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதால் அவை தமிழர்களின் நிலைக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதை விளக்க அவற்றின் பொருளை வரையறுக்க வேண்டிய அவசியம் வந்ததாக ஒபாமாவுக்கான தமிழர்களின் பேச்சாளர் ஒருவர் விவரித்தார்.

 அவ்விளக்கவுரை கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

 நாடுகடந்த  அரசாங்கம் (தற்காலிக அரசு எனவும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு நாட்டில் பழைய ஆட்சிமுறை முடிவுக்கு வந்த பின் புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை நாட்டில் உரிய சூழலை உருவாக்கச் செயல்படும் குறுகியகால அரசாங்கமாகும்.

 1917-ல் ரறாசிஸ் மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பின் உருவான இடைக்கால ரஷ்ய அரசு மற்றும் எத்தியோப்பிய ஆட்சியை ஆயுதப்போராட்டம் மூலம் வெற்றிகரமாகத் தகர்த்தெறிந்து நிரந்தர ஆட்சியை ஏற்படுத்துமுன் உருவாக்கப்பட்ட எரிட்ரிய இடைக்கால அரசு ஆகிய இரண்டையும் இங்கு முன்னுதாரணங்களாகக் குறிப்பிடலாம். இடைக்கால அரசுகள் அந்தந்த நாடுகளின் நிலப்பரப்புக்குள்ளேயே இயங்குகின்றன.

 புகலிட அரசு என்பது எதிரி நாட்டின் ஆக்கிரமிப்பு அல்லது புரட்சியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசாங்கம் தாய்நாட்டிற்கு வெளியே இயங்கும் நிலையைக் குறிப்பதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி போலந்து அரசானது ஜெர்மனி மற்றும் ரஷ்யாவினால் 1939-ல் தாக்கப்பட்டு பின்னர் 1990 வரை இரஷ்யா நிறுவிய கைப்பாவை அரசினால் அதிகாரம் பறிக்கப்பட்டதால் நாடு கடந்து இயங்கிய போலந்து அரசை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

 நாடு கடந்து இயங்கிய போலந்து அரசின் நோக்கமானது அரசாங்கத்தின் சட்டத்திற்குட்பட்ட தன்மையைப் பாதுகாத்து அடுத்த சட்டப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசிற்குக் கையளிப்பதேயாகும். அந்த நோக்கத்தை புகலிட   அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியது. நாடு கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நாடு ஒன்று தேவை: போலாந்தின் புகலிட அரசாங்கம் 1990 வரை பிரிட்டனில் இயங்கி வந்தது.

 தமிழர்களின் நிலை எரிட்ரியர்களின் நிலையைப் போன்றது. ஏனென்றால் கொடூரமான அடக்குமுறை அரசிற்கு எதிர்த்து நாம் போராடினோம். எரிட்ரியர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் அவர்களைப் போல் நமது நிலப்பகுதி நம் கட்டுப்பாட்டில் இல்லை.

 மக்களாட்சி முறையில் எதிர்காலத்தில் அமையும் என நாம் எதிர்பார்க்கும் தமிழர்களின் அரசாங்கத்திற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதே நமது நோக்கமாகையால் நம் நிலை போலாந்தின் புகலிட அரசினை ஒத்தது.

 வாக்கெடுப்பில் உள்ள கேள்விகள் நேரடியானவை மற்றும் எளிதானவைஇ ஆகவே தெளிவான பதில்களை அளிக்க முடியும் என ஒபாமாவுக்கான தமிழர்களின் பேச்சாளர் தெரிவித்தார்.

கீழ்க்கண்டவை கேள்விகளில் அடங்கியுள்ளன:

1. தற்போது நமது தாயகம் நமது கட்டுப்பாட்டில் இல்லையென்றாலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழர்களின் தாயகத்திற்கு ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமா?

2. தமிழர்கள் தமிழ்த் தாயகத்திற்கு ஒரு அரசாங்கத்தை உருவாக்கினால், நாம் ஒரு நாடு கடந்த அரசை உருவாக்க வேண்டுமா அல்லது ஒரு புகலிட அரசையா?

3. நாம் ஒரு நாடு கடந்த தமிழ் அரசை ஏற்படுத்தினால், தற்போது அந்த அரசு நம் தமிழர் தாயகத்தில் சந்திக்க முடியாது என்பதால் நாம் உலகளாவிய நாடற்ற நாடு கடந்த அரசை உருவாக்க முயற்சி செய்ய வேண்டுமா?

4. நாம் ஒரு நாடு கடந்த அரசை அல்லது புகலிட அரசையோ (இது பொதுவாக ஆதரவளிக்கும் ஒரு நாட்டில் இயங்க வேண்டும்) உருவாக்கினால் அது எங்கு இருக்க வேண்டும்?

5. தமிழர்கள் பிற நாடுகளை (அமெரிக்கா அல்லது இங்கிலாந்து் போன்றவை) இலங்கை அரசு மற்றும் இராணுவத்திற்கு எதிராகப் பன்னாட்டு நீதிமன்றங்களில் (ஹேக் நகரில் உள்ளது போன்ற பன்னாட்டு நீதிமன்றம்) போர்க் குற்றங்களைக் கொண்டு வர வலியுறுத்த வேண்டுமா?


6. இலங்கை அரசாங்கம் தமிழர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை பன்னாட்டு அரசாங்கத்தினால் மாற்ற முடியுமா?


7. தமிழர்களின் இறுதியான நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?

(நான்கு பதில்கள், விடுதலைபெற்ற தமிழ் தேசம்-ஈழம்- என்பது முதல் கொழும்புவிலுள்ள தேசிய அரசாங்கத்தின் ஆட்சியை ஏற்றுக் கொள்தல் வரையானவை கொடுக்கப்பட்டுள்ளன.)

ஒபாமாவுக்கான தமிழர்களின் பேச்சாளர் கருத்துக்கணிப்பு அக்டோபர் 12 2009-ல் இருந்து நவம்பர் 2 வரை நடத்தப்படும் என்று கூறினார். அதன் பின்னர் முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும்.

 தமிழர்கள் முக்கியமாக இலங்கையின் வடகிழக்கிலும் தென்னிந்தியாவிலும் வாழும் ஓர் இனக்குழுவினர். அண்மையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்களில் ஐக்கிய நாடுகளின் கணக்குப்படி இலங்கை அரசாங்கம் கிட்டத்தட்ட ஆயிரம் அப்பாவித் தமிழர்களை நாள்தோறும் கொன்றழித்தது மற்றும் 2009-ல் மட்டும் மொத்தம் 30000 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தது.

தமிழர்கள் இலங்கையில் சிறுபான்மையினராவர் அதனால் அவர்கள் இனப்படுகொலை எனக்கருதும் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த அமைப்பினரைத் தொடர்பு கொள்ள (617) 765- 4394 என்ற எண்ணில் அழைத்து ஒபாமாவுக்கான தமிழர்களின் தகவல் தொடர்பு இயக்குநரிடம் பேசவும் அல்லது அவருக்குச் செய்தி விடுக்கவும்.


 இக்கருத்துக்கணிப்பில் பங்குபெற இம்முகவரிக்குச் செல்லவும்.

www.tamilsforobama.com/poll3/What_now_for_the_TTamils.html
 



 

பின்னூட்டங்கள் (2)

Subscribe to this comment's feed
...
0
we understand about our citivation.right now we want to decide when we have to handed over this gonernment to tamil eellam.real.govrnment.the time is very importede.until that time we have to make all the work to make more stronger this govenment.slecting time is very impoternt,to handedover.smilies/kiss.gif
barathy , October 27, 2009
...
0
THIS IS THE WAY WE HAVE TO GO UNDER THE HUMAN WAY BECAUSE IS THE OUR NATIONAL LEADER GIVE A GOOD STEP SO WE HAVE TO USE THANKSsmilies/cool.gif
K.SIVARAJAH , October 26, 2009

சிறிது | பெரிது

busy
 
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

உலகச் செய்திகள்
News image

டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்

News image

பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்

News image

பாகிஸ்தானில் 150 பேருடன் விமானம் வீழ்ந்து நொருங்கியது

இந்திய செய்திகள்
News image

அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை

News image

விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு

News image

நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா

நடிகை அசினுக்கு எதிராக பரபரப்பு சுவரொட்டி

முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009