இலங்கையில் உள்ள தமிழர்கள் எத்தனை கோடி ஆண்டுகள் சென்றாலும் தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தாமாகவே போராடவேண்டும் என்பதை தமிழக அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளில் இருந்து புரிந்து கொள்ளவேண்டும். இன்னும் வெறும் வானத்தை பார்த்து நிலாச்சோற்றுக்காய் ஏங்கும் பேதைகளாக தமிழ் மக்கள் வழக்கூடாது.

 

தமிழ் மக்களை கொலைசெய்து குவித்து அக்குவியலின் உச்சியில் நின்று வெற்றிப் பெருமிதத்தோடு மார்புதட்டும் கொலைஞன் இராஜபக்ச உன்னையும் கொலை செய்திருப்பேன் எனக்கூறியும் தமிழ் மக்களின் காவலன் தங்கத்தமிழ் மகன் வீரத்தமிழன் திருமாவளவன் தனது புன்சிருப்பினை உதிர்த்தவண்ணம் தனது அரசியல் சாணக்கியத்தை திறமையாக வெளிப்படுத்தியுள்ளார்.


ஈழத்தமிழர்க்காக இறுதி மூச்சுவரை குரல் கொடுப்போம் என தேர்தலுக்கு முன்னர் கொக்கரித்த வீரமறவன் திருமாவளவனுக்கு இலட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்த உங்களுக்கு எனது உயிரைப்பறிப்பது சிரமம் இல்ல இதோ இப்போதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி தனது மார்பை நிமிர்த்திக்காட்டி ஒட்டுமொத்தத்தமிழர்களின் மானத்தையும் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் வராமை தமிழகத்தில் உள்ள அரசியல் வாதிகள் அனைவரும் தமிழ்மக்களை விற்றுப் பிழைக்கும் பச்சோந்திகள் என்பதை பறைசாற்றியுள்ளது.


இந்தியாவையும் தமிழகத்தையும் நம்பியே தமிழர்போராட்டம் சோரம்போயுள்ளது. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் நன்றாக சம்பாதித்துக் கொண்டணர் என்பதே உண்மை.

 

கருணாநிதியும்,ஜெயலலிதாவும் தமிழர்களின் சாபக்கக்கேடுகள் என்பதை தமிழ்மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளில்லை என்றால் தமிழினம் தலை நிமிர்ந்துகொள்வது சாத்தியமில்லை .

 

எனவே தமிழ் இளம் சமுகமே நமக்காக நாமே போராடுவோம். எமது போராட்டத்தை உயிர்த்தெழச்செய்வதற்கான முயற்சிகளில் ஒருங்கிணைவோம்.



இப்படிக்கு தமிழ்மகன்

 

பின்னூட்டங்கள் (3)

Subscribe to this comment's feed
...
0
The politician don't represent the peoples feelings but i have faith on Thiruma,i think he didn't expect this comment from the president and he also didn't no how to react immediately,if that conversation was in Tamil Thiruma would have shot back without hesitation.
pavendhan , November 01, 2009
...
0
we read this message is very good for all the tamil people from tamil ealam.
r.krishan , October 31, 2009
...
0
நமக்காக நாமே போராடுவோம். எமது போராட்டத்தை உயிர்த்தெழச்செய்வத
இளம்தமிழ் , October 16, 2009

சிறிது | பெரிது

busy
 
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

உலகச் செய்திகள்
News image

டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்

News image

பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்

News image

பாகிஸ்தானில் 150 பேருடன் விமானம் வீழ்ந்து நொருங்கியது

இந்திய செய்திகள்
News image

அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை

News image

விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு

News image

நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா

நடிகை அசினுக்கு எதிராக பரபரப்பு சுவரொட்டி

முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009