'உலகில் யுத்தம் நடந்த இடங்களில் பார்த்திராத அவலத்தை சிறி லங்காவில் கண்டேன்" என ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்ததன் மூலம் யுத்தத்தின் சேதாரங்கள் என்னவென்பதை அவர் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.

 

இது தவிர, பன்னாட்டு சுதந்திர ஊடகங்களும் அவ்வப்போது யுத்த அவலங்களையும், வன்னித் தடுப்பு முகாம்களில் அப்பாவித் தமிழ் மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் தொடர்பிலும் தகவல்களை வெளியிட்டு வந்தன. இந்தத் தகவல்கள் முழுமையானவை அல்ல என்பதை, சிறி லங்கா மனித உரிமைகள் சட்டத்தரணியும், இமடார் நிறுவனத் தலைவியுமான கலாநிதி நிமல்கா பெர்ணாண்டோ அண்மையில் தமிழ்நாட்டில் வைத்துத் தெரிவித்த கருத்துக்கள் உறுதிப் படுத்துகின்றன.
 

~தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பேசுகிறோம|; என இதுநாள்வரை கூறி வந்த

ஆய்வு:சண் தவராஜா

 பல தமிழர்களே, இன்று வாய்மூடி மௌனிகளாக உள்ள நிலையில் தனது உயிருக்கு நிச்சயம் ஆபத்து உள்ளது என்பதை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டும் கலாநிதி நிமல்கா இவ்வாறு தைரியமாகக் கருத்து வெளியிட்டமைக்காக அவரை நிச்சயமாகப் பாராட்டியே ஆக வேண்டும்.


இலங்கைத் தீவிலே வாழுகின்ற தமிழர்களை சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டுக் கொடுமைப்படுத்தி வருகையில், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகையில், அந்தச் சமூகத்தின் மத்தியிலே இருந்து - எதுவித உள்நோக்கமும் இன்றி - இத்தகைய கருத்துக்கள் வெளிவருவது என்பது ஆறுதலான ஒரு விடயம்.


அதேவேளை, அவர் வெளியிட்ட தகவல்கள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளன. குறிப்பாக, இளம் தமிழ்ப் பெண்கள் சிங்களப் படையினரின் பாலியல் பசியைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தமை கண்ணில் நீரை வரவழைக்கிறது.


யுத்தம் மிகவும் உக்கிரமமாக நடைபெற்ற இவ்வருட ஆரம்பத்தில் 'தமிழ்ப் பெண்களை உங்களுக்கு இரையாக்கிக் கொள்ளுங்கள். ஆண்களை கடலுக்கு இரையாக்குங்கள்" என சிறி லங்காவின் முன்னை நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்ததாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
இந்தச் செய்தி உண்மையோ, பொய்யோ நாமறியோம். ஆனால், நடைபெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கும் போது சரத் பொன்சேகாவின் பாதையையே படையினர் பின்பற்றுவது தெரிகின்றது.


வன்னித் தடுப்பு முகாம்களில் நடைபெற்றுவரும் அவலம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் அந்த மக்களின் துயரம் ஒட்டு மொத்தமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்தவொரு மட்டத்திலும் எடுக்கப் படுவதாகத் தெரியவில்லை. மறுபுறம், ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்தும் காத்திரமாக குரல் எழுப்பப் படுவதாகவும் தெரியவில்லை.


தடுப்பு முகாம் மக்களின் துயரம் முடிவடையாத சூழலில் பருவமழை வேறு அந்த மக்களை வெகுவாகச் சோதித்து வருகின்றது. மழை காரணமாக உருவான வெள்ளத்தினால் முகாம்களுக்குள் இருக்க முடியாத நிலையில் கொட்டும் மழையிலும் வெட்டவெளியில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப் பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.


இந்த வேளையில் ஈழத் தமிழர் மத்தியில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே இந்த மக்களின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் தந்து வருகின்றது. இந்தக் குரலுக்கு ஆதரவாக, பின்பலமாக இருக்க வேண்டிய புலம்பெயர் தமிழர்கள் சீரான தலைமை இல்லாத நிலையில் சிதறுண்டுபோய்க் கிடக்கின்றார்கள்.  இந்த நிலை வெகுவிரைவில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.


'எங்கள் பகைவர் ஓடி மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே" என்ற வாசகம் இன்று பொய்த்துப் போயுள்ளது. தமிழர்கள் மத்தியலே இன்று முன்னெப்போதையும் விட அதிக அளவிலான பிளவுகளும், பேதங்களும், அவநம்பிக்கையும் நிலவி வருகின்றன.


இதற்கெல்லாம் காரணம் எம் மத்தியிலே சரியான அரசியல் தலைமை இல்லாமையே. தலைமைத்துவ வழிபாடு என்ற அபாயகரமான சிந்தனையின் வழி வளர்க்கப்பட்ட ஈழத் தமிழ்ச் சமூகத்தில், தேசியத் தலைவர் பிரபாகரனின் வெற்றிடம் இன்னமும் நிரப்பப்படவில்லை. அவரைப் போன்ற மற்றுமொரு ஆளுமைமிகு தலைமை இப்போதைக்கு உருவாவதற்கான சாத்தியங்களெதுவும் தென்படவும் இல்லை.


ஆனால், மீகாமன் இல்லாத கப்பல் போன்று தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் நீண்ட காலத்துக்குப் பயணிக்க முடியாது. எனவே, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான ஒரு உறுதியான, பலமான, விவேகமான தலைமைத்துவம் அவசரமாகவும், அவசியமாகவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதில், தமிழ்ப் புத்திஜீவிகள் குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்கள் அதிக கவனஞ் செலுத்த வேண்டும்.
 

பின்னூட்டங்கள் (1)

Subscribe to this comment's feed
...
0
இதற்கெல்லாம் காரணம் மத்தியிலே சரியான அரசியல் தலைமை இல்லாமையே. தலைமைத்துவ வழிபாடு என்ற அபாயகரமான சிந்தனையின் வழி வளர்க்கப்பட்ட ஈழத் தமிழ்ச் சமூகத்தில், தேசியத் தலைவர் பிரபாகரனின் வெற்றிடம் இன்னமும் நிரப்பப்படவில்லை. அவரைப் போன்ற மற்றுமொரு ஆளுமைமிகு தலைமை இப்போதைக்கு உருவாவதற்கான சாத்தியங்களெதுவும் தென்படவும் இல்லை.
rao , October 12, 2009

சிறிது | பெரிது

busy
 
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

உலகச் செய்திகள்
News image

டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்

News image

பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்

News image

பாகிஸ்தானில் 150 பேருடன் விமானம் வீழ்ந்து நொருங்கியது

இந்திய செய்திகள்
News image

அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை

News image

விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு

News image

நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா

நடிகை அசினுக்கு எதிராக பரபரப்பு சுவரொட்டி

முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009