கறுப்பு ஜுலை நாளில், இதுவரை படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தும், போர்க் குற்ற விசாரணை மற்றும் தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் இன்றிரவு மாபெரும் பேரணி இடம்பெற இருப்பதுடன், அதனைத் தொடர்ந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.
மேற்கண்ட கோரிக்களை முன்வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை வெஸ்ற்மினிஸ்ரர் தேவாலயத்திற்குப் பின்புறமாக இருந்து பேரணி ஆரம்பித்து, பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை சென்றடையவுள்ளது. இந்த இரவுநேரப் போராட்டத்தைத் தொடர்ந்து அதே கோரிக்கைகளை முன்வைத்து ஜெனிவா ஐ.நா சபை நோக்கி சிவந்தன் நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.
மத்திய லண்டனில் இருந்து நடை பயணத்தை ஆரம்பிக்கும் சிவந்தன், டோவர் கடற்கரையைச் சென்றடைந்து, அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், பரிஸ் நகரம் ஊடாக சுவிற்சர்லாந்து ஜெனீவா நோக்கி நடந்துசெல்ல இருக்கின்றார்.
இவரது நடை பயணத்திற்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஜெனீவாவை சென்றடைந்து, ஐ.நா மனித உரிமைகள் சபையில் மனுக் கையளிக்கப்பட இருப்பதுடன், அங்கு ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றல்) 6ஆம் நாள் பிற்பகல் 2:00 மணியளவில் மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு நடைபெறவுள்ளது.
சிவந்தனின் நடை பயணத்தின்போது அந்தந்த நாட்டு மக்களிற்கு அவர்களின் மொழியில் அச்சிடப்பட்ட அவரது கோரிக்கைகள், மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன. அந்தப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத் தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள் போன்ற சமூகத் தலைவர்களுனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன.
அத்துடன், சிவந்தன் மேற்கொள்ளும் இந்த நடை பயணத்தில் தத்தமது பிரதேசங்களில் தமிழ் மக்களும் இணைந்து நடக்குமாறு ஐரோப்பாவிலுள்ள பல தமிழ் அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

தொடர்புச் செய்திகள்

.jpg)

.jpg)